/* */

மோகனூர் போலீசில் உள்ள வாகனங்களை 15 நாட்களில் திரும்பப் பெற வேண்டும்

மோகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, ஆவணங்களை 15 தினங்களுக்குள் வழங்கி, அவற்றை திரும்ப பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் போலீசில் உள்ள வாகனங்களை 15 நாட்களில் திரும்பப் பெற வேண்டும்
X

கோப்பு படம்

இது குறித்து, மோகனூர் தாசில்தார் (பொ) மாதேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: மோகனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக, 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மோகனூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விபரங்கள் மோகனூர் தாசில்தார் அலுவலக அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களது வாகனங்களுக்கான ஆவணங்களை 15 நாட்களுக்குள், மோகனூர் போலீஸ் நிலையத்தில் வழங்கி வாகனங்களை மீட்டுக் கொள்ளலாம். 15 தினங்களுக்கு மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...