/* */

பால் விலையை உயர்த்தி அறிவிக்காவிட்டால் சட்டசபை முற்றுகை போராட்டம்

பால் விலையை உயர்த்தி அறிவிக்காவிட்டால் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

HIGHLIGHTS

பால் விலையை உயர்த்தி  அறிவிக்காவிட்டால் சட்டசபை முற்றுகை  போராட்டம்
X

நாளை சட்டசபையில் நடைபெறும், பால்வளத்துறை மானியக்கோரிக்கையின்போது, பால் விலையை உயர்த்தி அறிவிக்காவிட்டால், சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர், வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழதகத்தில் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு உப தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். பால் உற்பத்தி மூலம், அவர்களின் அன்றாட செலவுக்கான, பொருளாதார தேவைகளை ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரக் கூடியதாக இல்லாமல், கடினமான வேலையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்வதற்கு மாட்டுத் தீவனம் விலை, வேலை ஆட்கள் கூலி பலமடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களின் வாடகை பெருமளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில் பால் விலையை உயர்த்தி கொடுக்க கோரி ஏற்கனவே பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஒரு லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலை உயர்த்தி பசும்பால் லிட்டர் 1-க்கு ரூ.35-ம், எருமைப்பால் லிட்டர் 1- க்கு ரூ.44-ம் தமிழக அரசு அறிவித்தது. பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையாக இல்லை.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட பேராட்டங்கள் நடத்தியும், தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதøல் விலையை உயர்த்தி அறிவிக்கவில்லை. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது. இந்த நிலையில் நாளை ஏப். 5ம் தேதி, சட்டசபையில், பால் வளத்துறையின் மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10 உயர்த்தி அறிவிக்க வேண்டுகிறோம். அப்படி அறிவிக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 4 April 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!