/* */

விஜயபாஸ்கருடன் நெருக்கமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் ரெய்டு

நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

விஜயபாஸ்கருடன் நெருக்கமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் ரெய்டு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள கோலாரம் கிராமம், வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவர் பல ஆண்டுகளாக தனக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் மூலம், நாமக்கல், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள், மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள், குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள் போன்ற அரசுப்பணிகளை கான்ட்ராக்ட் பெற்று கட்டுமானப் பணிகளை செய்து வருகிறார்.

இன்று காலை திடீரென்று நாமக்கல், நல்லிபாளையம் அருகில் உள்ள அவரது கட்டுமான அலுவலகம், கோலாரத்தில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களுடன், தென்னரசு நெருக்கமாக இருந்ததால் இப்போது அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 22 Oct 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...