/* */

உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்

திருமண நாளில் உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிதானது அல்ல.

HIGHLIGHTS

உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
X

திருமண வாழ்த்துகள்

திருமண தினம் என்பது நம் அனைவரது வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான நிகழ்வு திருமணம் தான். ஒருவருக்கு இல்லற வழக்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதை விட பெரிதாக ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது?

அத்தகைய சிறப்பான நிகழ்வான திருமணம் நல்ல படியாக நடைபெற பெரியவர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசிர்வாதம் மிகவும் அவசியமாகிறது. அதனாலேயே ஊர் கூடி சுற்றம் சூழ நின்று வரவேற்று அனைவரும் ஒன்று கூடி திருமணத்தை நடத்தி வைக்கின்றார்கள்.

உற்றார் உறவினர்கள் புடை சூழ, பெரியோர்களின் ஆசியுடன் பலருக்கும் திருமணம் நடந்ததாலும் சில நேரங்களில் நமக்கு மிகவும் நெருக்கமான சிலரின் திருமணத்திற்கு கூட முக்கியமான சில வேலை காரணங்களுக்காக நாம் செல்ல முடியாது ஒரு சூழல் ஏற்படும். அது போன்ற சமயங்களில் மணமேடையில் வீற்றிருக்கும் உங்கள் உறவின் முகத்தில் புன்னகை பூக்கச்செய்யும் வகையில் இந்த பதிவில் அளிக்கப்பட்டுள்ள வாழ்த்துகள் இருக்கும்.

இந்த நிகழ்வு இப்படி நிகழ்ந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலையினால் நமது நெருக்கமான தோழர் மற்றும் தோழி, உணவினர்கள், நண்பர்கள் மற்றும் சில நெருக்கமான நபர்களது திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த சமயத்தில் திருமண வாழ்த்து கவிதை நாம் அனுப்பி நமது சந்தோசத்தை வெளிக்காட்டலாம்.


  • சூரியன், சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும், பந்தங்களும், சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினரும், நண்பர்களும், நெருக்கமான நேசங்கள் ஒன்றுசேர ஆசீர்வதிக்கும் பொன்னான இந்த திருமண விழா உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கட்டும். இனிய திருமண நாள் வாழ்த்துகள்
  • திருமண கோலத்தில் எழுதப்படும் நல்வரவு போல இனிவரும் காலங்கள் அனைத்தும் உங்கள் வாழ்வில் நல்லதாகவே அமையட்டும். இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்
  • இந்த மங்கலகரமான நாளில் நீங்கள் இருவரும் அனைத்து மங்கலங்களையும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துகள்
  • வாழ்க்கை என்பதற்கான உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த நன்னாள் ஆன உங்களின் திருமண நாளில் நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்
  • பிரியாத அன்பும் புரிந்துகொள்ளும் பக்குவமும் விட்டுக்கொடுக்காத பண்பும் கொண்டு பல்லாண்டு வாழ இனிய திருமணநாள் வாழ்த்துகள்
  • வாழ்த்துகள் மழைபோல் பொழிய மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
  • ஆயிரம் உறவுகள் கூடி கோர்த்த மாலைகளை கழுத்தில் சூடி, மங்கள வாத்தியங்களோடு மனதிற்குள் பேரின்பத்தை உணரும் இந்நாள் என்றும் நன்னாளாக இருக்கட்டும். இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
  • அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி முகம் மலர்ந்து தினமும் சிரித்து வாழ மனம் கனிந்த திருமண நாளில் வாழ்த்துகிறேன்
  • தென்றலின் சாமர வீச்சில் திங்களின் ஒளி ஒத்தடத்தில் மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
  • இன்று போல் என்றும் மகிழ்ச்சியிலும், அன்பிலும் திளைத்து இன்பமயமான வாழ்க. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
  • மனம் போல மாங்கல்யம் மன்றத்தில் உற்றார் உறவினர்களின் வாழ்த்துகள் மழைபோல் பொழிய, மலர்மாலை சூடி பல்லாண்டு மகிழ்வோடு வாழ்க
Updated On: 7 May 2024 3:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!