/* */

நாமக்கல்லில் தேர்த் திருவிழா முடிந்த பிறகு குளக்கரைத்திடலில் தேர்க் கடை :பொதுமக்கள் பாதிப்பு,மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை

public demand action ,namakkal temple area temporary shops நாமக்கல் நகரில், தேர்த் திருவிழா முடிந்த பிறகு, கார் பார்க்கிங் செய்யப்படும் குளக்கரைத் திடலில், தேர்கடை அமைப்பதால், வாகனங்கள் நிறுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தேர்த் திருவிழா முடிந்த பிறகு குளக்கரைத்திடலில் தேர்க் கடை :பொதுமக்கள் பாதிப்பு,மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை
X

நாமக்கல்லில் தேர்த்திருவிழா முடிந்தபிறகு, தேர்கடைகள் அமைப்பதற்காக, மெயின்ரோட்டில்  குளக்கரைத் திடலில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

public demand action ,namakkal temple area temporary shops

நாமக்கல் நகரில், தேர்த் திருவிழா முடிந்த பிறகு, கார் பார்க்கிங் செய்யப்படும் குளக்கரைத் திடலில், தேர்கடை அமைப்பதால், வாகனங்கள் நிறுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரே கல்லினால் உருவான நாமக்கல் நகரின் கிழக்குப் பகுதியில் ஸ்ரீ அரங்காநாயகி தாயார் உடனுரை, அரங்கநாதர் கோயில் குடவறைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் சாமி கோயில் குடவறைக்கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் நேர் எதிரில் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த 3 திருக்கோயில்களும், புரான சிறப்பு பெற்றக்கோயிலாகும். இந்த கோயில்கள் மற்றும் நாமக்கல் மலை உள்ளிட்ட பகுதிகள் இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குணி மாதத்தில், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய கோயில்களில் தேர்த்திருவிழ நடைபெறும். பங்குணி உத்திரத்திற்கு அடுத்த நாள் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தேர்த்திருவிழாவின் போது நாமக்கல் மெயின் ரோடு மற்றும் குளக்கரைத்திடலில் தற்காலிக தேர் கடைகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும். கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த 3 ஆண்டுகளாக தேர் கடைகள் அமைக்கப்பட வில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, நாமக்கல் பார்க் ரோட்டில் உள்ள பூங்கா பகுதியில் தேர்க் கடைகள் அமைக்கப்பட்டன.

public demand action ,namakkal temple area temporary shops

நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. இந்த திடல் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க டூ வீலர்கள் மற்றும் காõர்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம். மேலும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குளக்கரைத்திடலுக்கு வந்து நாமக்கல் மலை ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். நாமக்கல் நகருக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தரும்போது இந்த குளக்கரைத்திடலில்தான் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். ஏற்கனவே குளக்கரைத்திடல் குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடந்தது. கட்ந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அதிமுக எம்எல்ஏ பாஸ்கரின் முயற்சியால் குளக்கரைத்திடல் முழுவதும் சீரமைக்கப்பட்டு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

public demand action ,namakkal temple area temporary shops

நாமக்கல்லில் இந்த ஆண்டு, முப்பெரும் தேர்த்திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மெயின் ரோட்டில் உள்ள குளக்கரைத்திடலில், தற்காலிக தேர் கடைகள் அமைப்பதற்காக கடந்த 2 நாட்களாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பந்தல் அமைப்பதற்காக பேர் பிளாக் தளத்தில் குழிகள் தோண்டி பந்தல்கால் நடப்படுவதால் தரைத்தளம் சேதமடைகிறது. இதனால் பிற்காலத்தில் குளக்கரைத்திடல் மீண்டும் குண்டும் குழியுமாகக மாறி, முழுமையாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கடை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் குளக்கரைத்திடலுக்குள் வாகனங்கள் வரக் கூடாது என்று தடை செய்துள்ளனர். இதனால் கடைவீதி மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களின் டூ வீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த முடியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலை ஒரு மாதம் வரை நீடித்தால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி தேர் கடையை, குளக்கரை திடலில் அமைக்காமல், பார்க் ரோட்டில் உள்ள பூங்கா பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 18 April 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?