பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 5,00,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. வேலை தேடுபவர்கள் கடனுக்கு பயணிகள் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டு விடுகின்றனர்.
தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டை
2. வாக்காளர் அட்டை
3. ஆதார் அட்டை
4. இரண்டு புகைப்படம்
5. சாதி சான்று
6. வருமான சான்று ( குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்)
7. கல்வி சான்று
8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம்
(இது வாகன கடனுக்கு மட்டும் தேவை)
9. கொட்டேஷன்
10. திட்ட அறிக்கை
11.தேசியமயமான வங்கி கணக்கு எண்
எனவே தகுதியுள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்து பலன் அடையலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu