ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!

ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
X

ஆரணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்

ஆரணி அருகே கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முருக மங்கலம் என்ற கிராமத்தில் 600 ஆண்டுகளுக்கு முன் இருந்த கோட்டையின் தடயங்கள் மற்றும் வீரர்களின் நடுகல் ஆகியவற்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முருக மங்கலம் என்கிற கிராமத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ள ராஜ கம்பீர மலை அருகே சம்புவராயர் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர்.

அப்பொழுது அந்த கிராமத்தில் தலைமை இடமாக கொண்டு கோட்டை கட்டி ஆட்சி செய்ததற்கான அடையாளமாக பண்டைய கால செங்கல் தூண்கள், உடைந்த பானை ஓடுகள், வீரர்களின் நடுக்கல், கல் மண்டபங்கள் ஆகியவற்றினை தற்போது ஆரணியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் விஜயன் என்பவர் கண்டெடுத்துள்ளார்.

அந்த கிராமத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் விஜயன் கூறுகையில்

முருக மங்கலம் என்கிற கிராமத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு சம்புவராய மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான தடயங்கள் தற்போது கிடைத்திருப்பதாகவும், இதனைப் பற்றி புத்தகங்களில் ஆராய்ந்த போது முருக மங்கலத்தில் உள்ள கோட்டை இருந்திருப்பதாகவும் அதனைப் பற்றி ஆங்கிலேயர்கள் சில குறிப்புகள் மட்டும் எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

படவேடு ராஜ்யத்தை போரில் வென்ற விஜய நகர படைகள் சம்புவராயர்களின் கோட்டை இருந்த முருக மங்கலம் கிராமத்தையும் தாக்குதல் நடத்தி இருக்கலாம், போர் நடந்ததற்கு அடையாளமாக இறந்த போர் வீரர்களின் நடுகல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது என கூறினார் .

முருக மங்கலம் கிராமத்தில் உள்ள வயல் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அந்த கிராமத்தில் இருக்கும் நன்செய் புன்செய் நிலங்கள் உள்ள இடத்தில்தான் அந்த காலத்தில் போர் நடந்துள்ள இடம் ஆகும். ஆகையால் இந்த கிராமத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு பண்டைய கால அடையாளங்களை கண்டெடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!