அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!

அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ...  வெதர்மேன் எச்சரிக்கை.!
X
தமிழகத்தில் மே 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று முதல் மே 21ம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வரப்போகும் 3 நாட்கள் மன்னார் வளைகுடாவில் இருந்து வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி பெரும் வளிமண்டல சுழற்சி உருவாகி வருகிறது. இன்னும் 2 நாட்களில் பெரிய புயல் சின்னமாக உருவாகி தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளில் இருந்து இது நகரும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புயல் சின்னம் உருவாகக்கூடும் என்பதால் சென்னை உட்பட வட தமிழக பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!