/* */

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஒரே மாதத்தில் டீசல் ரூ.7.80 உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.7.80 உயர்ந்து ரூ.102.89 ஆனது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு:  ஒரே மாதத்தில் டீசல் ரூ.7.80 உயர்வு
X

பைல் படம்.

பெட்ரோல், டீசல் மிக அத்தியாவசியமான எரிபொருளாக இருந்தபோதும், சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை கம்பெனிகள் விலையை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் கம்பெனிகள் தினசரி உயர்த்தி வருகின்றன. கொரோன ஊரடங்கு காலத்திலும், முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும் கூட எண்ணை கம்பெனிகள் தவறாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த செப். 30ம் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.95.09க்கு விற்பனையானது. நாள்தோறும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த ஒரு மாதத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.7.80 உயர்ந்து, இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.102.89 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பகுதியில் இன்றைய விலை விபரம்:

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.89 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.106.66 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 110.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 Oct 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...