/* */

ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள நாமக்கல்லில் சிறப்பு வார்டு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, தயார் நிலையில் சிறப்பு வார்டுகள் உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள நாமக்கல்லில் சிறப்பு வார்டு: கலெக்டர்
X

இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை யாரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஒமிக்ரான் நோய்த்தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 30 படுக்கை வசதி கொண்ட 5 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் 200 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில், கடந்த வாரம் கொரோனா நோய்த்தொற்று முற்றிய நிலையில் வந்த முதியோர்களுக்கு இறப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் நம்மிடமிருந்து அகலவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14,64,300 நபர்களில் 11,57,687 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7,98,794 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Updated On: 6 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  4. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  5. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  6. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  9. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  10. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!