காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு

காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
X

உயிரிழந்த இளைஞர்கள்.

பள்ளிப்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தில் காட்டுப்பண்டுகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் இரு இளைஞர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் காலனியை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 25). இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் கொசஸ்தலை ஆற்றில் மணல் அல்ல சென்றதாக கூறப்படுகிறது. மணல் மூட்டையை கட்டி மோட்டார் சைக்கிளில் வைக்கும் போது, ரோந்து பணியில் இருந்த போலீசார் சாய்குமாரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்து ரத்தினம் என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் சாய்குமார் சென்றுள்ளார். திரும்பி வருவதற்கு வழி தெரியாமல் இருந்த சாய்குமார் தனது கிராமத்தைச் சேர்ந்த நண்பர் பார்த்தசாரதி (வயது 21) என்பவருக்கு தனது கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

நண்பரை அழைத்து வரச் சென்ற பார்த்தசாரதி, கரும்புத் தோட்டத்தில் சாய்குமார் மின்வேலியில் சிக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த பகவான் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பகவான் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பார்த்தசாரதி சாய்குமாரை காப்பாற்ற முயன்ற போது அவரும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் இருவரும் உயிரிழந்ததை கண்ட பகவான் வெளியகரம் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் மின் இணைப்பை துண்டித்து, இருவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பார்த்தசாரதி, சாய்குமார் இருவரும் ஏற்கனவே உயிர் இழந்ததாக தெரிவித்தனர். ரத்தினம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கரும்பு தோட்டம் குத்தகைக்கு எடுத்து கரும்பு தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார்.

காட்டு பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் இளைஞர்கள் இருவர் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த இரண்டு இளைஞர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story