/* */

வெளிநாடுகளில் பணிபுரிய நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பயிற்சி பெற்ற நர்சுகள், வெளிநாடுகளில் பணி புரிய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாயிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் கீழ் அரசு சார்ந்த நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனம் 40 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு மனித வளம் வழங்கும் நிறுவனமாக நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் வேலை தேடுபவர்களை அங்கீகாரமற்ற மற்றும் நேர்மையற்ற நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுவதாகும். வெளிநாட்டுப் பணிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

அதேவேளையில், வேலை தரும் நாடுகள் தங்கள் நாட்டு மொழி அறிவு மற்றும் மிகுந்த திறன்படைத்த நர்சுகளை பணியமர்த்த விரும்புகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் 500 நர்சுகளுக்கு ஆங்கில மொழிப் புலமைத் தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது.

தற்போது வெளிநாடுகளில், நர்சு பணிக்கு தேவை உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமாக ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை கிடைக்கும். இதற்காக இங்கிலாந்து, குவைத் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இண்டர்நெட் முகவரியில் அயல்நாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அனுகலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Sep 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  2. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  4. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  5. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  6. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  9. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  10. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்