பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி

பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து திங்கட்கிழமை (மே.20) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 762 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து திங்கட்கிழமை (மே.20) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 762 கன அடியாக உள்ளது.

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய அணையாக உள்ளது. இந்நிலையில், தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (மே.19) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக இருந்த நிலையில், இன்று (மே.20) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 762 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 44.86 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 45.18 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் நீர் இருப்பு 3.37 டிஎம்சியாக உள்ளது. மேலும், பவானிசாகர் பகுதியில் 4.6 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!