/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
X

சரோஜ்குமார் தாக்கூர், நாமக்கல் எஸ்.பி.,

நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் இன்று 31ம் தேதி இரவு ஹோட்டல்கள், லாட்ஜ்கள், ரோடுகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

புத்தாண்டை ஒட்டி வாகனங்களில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இன்று இரவு முதல் மாவட்டத்தில் 93 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. 33 டூ வீலர்களில் போலீஸ் ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 11 வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை செல்லும் வழிகளில் காரவள்ளி மற்றும் முள்ளுக்குறிச்சி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்படும். 2022 புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் அசம்பாவிதமின்றியும் கொண்டாடும் வகையில், மாவட்டத்தில் 900 போலீஸார் மற்றும் 200 ஊர்காவல் படையினரைக் கொண்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்பப்பட்டுள்ளது. எனவே போலீசாருடன் ஒத்துழைத்து, பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாடி மகிழ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 31 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்