/* */

நாமக்கல்லில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் துவக்கிவைப்பு

நாமக்கல் பகுதியில், ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை, எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் துவக்கிவைப்பு
X

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்ள்ள புதிய மின் மாற்றிகளை, எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். அருகில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், முன்னாள் எம்.பி. சுந்தரம் ஆகியோர்.

நாமக்கல் பகுதியில் உள்ள என்ஜிஜிஓ காலனி, ராஜீவ்காந்தி நகர், இபி காலனி லட்சுமி நகர் மற்றும் வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 500 கிலோவாட் திறனுள்ள 4 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் துவக்க விழா நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மின் மாற்றிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குறைந்த அழுத்த மின் விநியோகத்தால், பொதுமக்களின் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதடையாமல் பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் புதிய மின் மாற்றகிளை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 ÷ காடி மதிப்பீட்டில், 44 புதிய மின்மாற்றிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று நாமக்கல் பகுதியில் 4 இடங்களில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் 500 மெகாவாட் திறன் கொண்ட 4 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் குறைந்த அழுத்தம் இல்லாத, சீரானமின் விநியோகம் வழங்கப்படும் என்றார். முன்னாள் எம்.பி. சுந்தரம், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகர், உதவி செயற்பொறியாளர் சவுந்தரபாண்டியன், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?