/* */

நாமக்கல் அருகே ரூ. 6.93 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை எம்.பி. துவக்கம்

நாமக்கல் அருகே ரூ. 6.93 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே ரூ. 6.93 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை எம்.பி. துவக்கம்
X

நாமக்கல் அருகே வேட்டாம்பாடியில் ரூ. 6.93 கோடி மதிப்பீட்டில், புதிய திட்டப்பணிகளை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வேட்டாம்பாடி பஞ்சாயத்தில், மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - ராசிபுரம் இணைப்பு சாலையை, இருவழித் தடத்தில் இருந்து, அகலப்படுத்தி, பல வழித்தடமாக மாற்றவும், மழைநீர் வடிகால் அமைத்து, தடுப்பு சுவர் மற்றும் பாலங்கள் கட்டவும் ரூ. 6 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை மூலம் அனுமதி அளிக்கப்பட்டு, நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேட்டாம்படி கிராம பஞ்சாயத்திற்கு, புதிய கிராம செயலக அலுவலக கட்டிடம் கட்ட ரூ.42.65 மதிப்பீட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ. 45.31 லட்சம் மதிப்பீட்டில், 11 புதிய திட்டப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

இதைத்தொடர்ந்து திட்டப்பணிகள் துவக்க விழா, நாமக்கல் - சேந்தமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள வேட்டாம்பாடி அருகில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயாலளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் பூமி பூஜையில் கலந்துகொண்டு, திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 March 2023 6:58 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...