/* */

தயார் நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் -இந்த ஆண்டு அட்மிஷன் நடைபெறுமா?

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள், கொரானா ஊரடங்கிலும் 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

தயார் நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் -இந்த ஆண்டு அட்மிஷன் நடைபெறுமா?
X

கொரோனா ஊரடங்கு காலத்திலும், 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ள நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள், கொரானா ஊரடங்கிலும் 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முதலாண்டு சேர்க்கை நடைபெறுமா என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் பின்புறம் 37 ஏக்கர் பரப்பளவில், ரூ.338.76 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க கடந்த ஆண்டு தமிழக அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி நிர்வாக கட்டிடம், வகுப்பறைக் கட்டிடம் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் 5,58,281 ச.அடி பரப்பில் ரூ.181.545 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, நாமக்கல்லைச் சேர்ந்த பிஎஸ்டி கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியினர் ஒப்பந்தம் பெற்று பணியினைச் செய்து வருகின்றனர். இதற்கு அருகில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட கட்டிடங்கள் மற்றொரு கான்ட்ராக்டருக்கு வழங்கப்பட்டு அதன் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கல்லூரி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இந்த 2021-21ம் கல்வியாண்டில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கையை துவக்க வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. இதை நிறைவேற்றும் வகையில் மருத்துவக்கல்லூரி கல்லூரி கட்டிடம், நிர்வாகக் கட்டிடம், டீன் அலுவலகம், ஆடிட்டோரியம், கேன்டீன், உயர் மின் அழுத்த அறை, மாணவர்கள் ஹாஸ்டல், மாணவிகள் ஹாஸ்டல், டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள் குடியிருப்பு, முதல்வர் குடியிருப்பு, உள்ளிருப்பு டாக்டர்கள் ஆண்/பெண் குடியிருப்புகள் ஆகிய கட்டிடங்கள் வேலை துவக்கப்பட்டு 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்து 13 மாதங்கள் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், வெளிமாநில பணியாளர்களை தனி பஸ்களில் அழைத்து வந்து, வளாகத்திலேயே தங்க வைத்து, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கட்டுமானப் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டுள்ளன. மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் லைப்ரரி போன்றவைகளும் கட்டி முடிக்கப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வருகின்ற செப்டம் மாதம் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்து. இந்த தேர்தவை எழுதி தேர்ச்சி பெறும் 150 மாணவ மாணவியர், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அட்மிஷன் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை அங்கீகாரத்திற்காக, புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கடந்த 5ம் தேதி சென்னை மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலக அதிகாரிகள், நாமக்கல் வந்து கல்லூரி கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர். கல்லூரி வளாகத்தைச் சுற்றிலும் காம்பவுண்டு சுவர், நுழைவு வாயில், தீத்தடுப்பு அமைப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 13 மாதங்களில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்பட்டு, கல்லூரி மாணவ மாணவியர் சேர்க்கைக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் முதலாண்டு சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்கள் எடுத்து வருகின்றனர் என்று பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் தென்னரசு தெரிவித்தார்.

Updated On: 13 July 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு