/* */

நாமக்கல் நகராட்சி 30வது வார்டு பாஜக வேட்பாளர் அகிலன் தீவிர ஓட்டு வேட்டை

நாமக்கல் நகராட்சி 30வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அகிலன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி 30வது வார்டு பாஜக வேட்பாளர் அகிலன் தீவிர ஓட்டு வேட்டை
X

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் பாஜக வேட்பாளர் அகிலன், முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் நகராட்சி, 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, மாவட்ட பாஜக செயலாளர் அகிலன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாமக்கல் திருச்சி ரோடு பகுதியில் உள்ள சத்யா நகர், செட்டியார் தெரு, ஜெயநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, நான் வெற்றிபெற்றால் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன்; அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும், சலுகைகளையும் பெற்றுத்தருவேன். சாக்கடை தேங்காமல் சுகாதாரம் பேனப்படும். தெருநாய்களின் தொல்லைகளை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சத்யபானு, பாஜக பிரமுகர்கள் கண்ணன், சாரதா, பாஸ்கர், கந்தசாமி, நவீன், அங்கம்மாள், சுதா, பரமேஸ்வரி உள்ளிட்டோர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...