/* */

உக்ரைனில் தவிக்கும் நாமக்கல் மாணவர்: அழைத்து வரக்கோரி எம்.பி கடிதம்

உக்ரைனில் உள்ள் நாமக்கல் மாணவரை, அழைத்துவர நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு நாமக்கல் எம்.பி சின்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

உக்ரைனில் தவிக்கும் நாமக்கல் மாணவர்: அழைத்து வரக்கோரி எம்.பி கடிதம்
X

நாமக்கல் எம்.பி சின்ராஜ்

இது குறித்து, நாமக்கல் எம்.பி சின்ராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர், இவரது மகன் சரவணன் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் ஏற்பட்டுள்ளதால், மாõணவர் சரவணன், விமானம் மூலமாக உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளதால், அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

சரவணன் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பமுடியாமல் அங்கு தவித்து வருகின்றார். இதனால் சரவணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நாமக்கல் மாணவன் உட்பட அங்குள்ள இந்தியர்களை மீட்டு, சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 25 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது