/* */

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், மாநில தி.மு.க. இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாள்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதையடுத்து, நேற்று தலைமை கழகத்தில் இருந்து அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக சேந்தமங்கலம் விஸ்வநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், துணை அமைப்பாளர்களாக நாமக்கல் இளம்பரிதி, பொம்மம்பட்டி பிரபாகரன், ராசிபுரம் கார்த்திக், நாரைக்கிணறு ரமேஷ்குமார், முத்துகாப்பட்டி கலைவாணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக திருச்செங்கோடு பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், துணை அமைப்பாளர்களாக, ப.வேலூர் சுந்தர், நவலடி ராஜா, குமாரபாளையம் கதிரவன், பல்லக்காபாளையம் முரளி, கூத்தகவுண்டம்பாளையம் ஜெகதீஷ்குமார், சோமனம்பட்டி கார்த்திகேயன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 6 July 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறுமையை ஒழிக்க தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தாயுமானவர் திட்டம்
  2. வானிலை
    வங்க கடலில் புதிதாக உருவாகியது ரீமல் புயல்
  3. க்ரைம்
    காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை துவக்கம்
  4. ஈரோடு
    ஈரோடு டி.என்.பாளையம் வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அமுதமான தமிழ் மொழியில் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது
  7. விளையாட்டு
    ஐபிஎல் கிரிக்கெட்: ஆர்சிபி வெளியேறியதை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்
  8. ஈரோடு
    பவானி எலவமலையில் புகையிலை, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
  9. ஈரோடு
    கோபியில் நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்குத் தீர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புது வீடு கட்டிப்பார்ப்போம்..! புன்னகையை சேர்ப்போம்..!