கோபியில் நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்குத் தீர்வு

கோபியில் நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்குத் தீர்வு

நடமாடும் நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன் வழக்குகளை விசாரித்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூரில் நடமாடும் நீதிமன்றம் மூலம் 30 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.

Erode News, Erode Today News, Erode Live News - கோபி அருகே பாரியூரில் நடமாடும் நீதிமன்றம் மூலம் 30 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி, சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசார் கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தலைக் கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கியவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், காப்பீடு செய்யாத வாகனங்கள், கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் எனப் போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கோபி பாரியூரில் நடமாடும் நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன் முன் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்குகளை விசாரித்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளில் கோபியில் 10 பேருக்கும், சத்தியமங்கலத்தில் 20 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்கு அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி, போக்குவரத்து போலீசார் கார்த்திகேயன், பாலமுருகன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story