/* */

வங்க கடலில் புதிதாக உருவாகியது ரீமல் புயல்

வங்க கடலில் புதிதாக உருவாகி உள்ளது ரீமல் புயல்.

HIGHLIGHTS

வங்க கடலில் புதிதாக உருவாகியது ரீமல் புயல்
X

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை மறுநாள் காலை புயலாக வலுப்பெறுகிறது.காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்காக நகர்ந்து நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும். வரும் 26ஆம் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. அதற்கு ரீமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வருகிற 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் பல மாவட்டங்களில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் தமிழகம் கோடைகாலத்தில் இருந்து விடை பெற்று குளிர்காலம் போல் மாறிவிட்டது.

இந்நிலையில் வட தமிழகத்திற்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று அதிகாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ,திருச்சி ,கோவை ,ஈரோடு ,திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது மழைக்காலத்தில் கூட பொய்யாத இந்த மழையை பார்த்து திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த புயல் சின்னமானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ள இது புயலாக மாறி நாளை மறுநாள் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ரீமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகி பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 23 May 2024 12:05 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  2. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  4. ஈரோடு
    6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக...
  5. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...
  6. ஈரோடு
    திரைப்பட வசனத்தை மேற்கொள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி
  7. ஆன்மீகம்
    வார ராசிபலன் 16 முதல் ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் போதை பொருட்களுடன் ரஷ்ய பெண் கைது
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்