காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை துவக்கம்

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை துவக்கம்
X

ஜெயக்குமார்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை துவக்கி உள்ளனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே பி கே ஜெயக்குமார். இவர் கடந்த இரண்டாம் தேதி திடீர் என காணாமல் போனார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இந்த நிலையில் நான்காம் தேதி அவர் தனது வீட்டின் அருகில் உள்ள அவரது தோட்டத்திலேயே உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. உடல் முழுவதும் கம்பிகளால் சுற்றி கட்டப்பட்டிருந்தது.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஜெயக்குமார் மர்ம மரணம். இது தொடர்பாக திசையன்விளை போலீசார் முதலில் விசாரணையை தொடங்கினர் அப்போது ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் இரண்டு கடிதங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஜெயக்குமார் கையினால் எழுதப்பட்ட அந்த கடிதங்கள் எஸ்பி இடம் சேர்க்கப்படவில்லை. அவரது வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினர் உள்பட முக்கிய பிரமுகர்கள் சிலரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இது தொடர்பாக போலீசார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்து கொண்டாரா என்பதில் இதுவரை துப்பு துவங்கவில்லை.

இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு உள்ளனர் ஆனாலும் இதுவரை துப்பு துவங்கவில்லை. இந்த நிலையில் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை விசாரித்து துப்பு துலக்குவதற்காக இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக தங்களது விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக சிபிசிஐடி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்ட் சங்கர் தலைமையில் டிஎஸ்பி உலகராணி மற்றும் அதிகாரிகள் இன்று ஜெயக்குமார் சடலமாக கிடந்த சடலமாக கிடந்த தோட்டத்தின் அருகில் விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!