ஐபிஎல் கிரிக்கெட்: ஆர்சிபி வெளியேறியதை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் எலிமினேட்டர் ஆட்டத்தில், ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி – டு பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர். 5ஆவது ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் 17 ரன்களில் அவுட் ஆக, 8ஆவது ஓவரில் 33 ரன்களுக்கு கோலியும் அவுட் ஆனார். 13ஆவது ஓவரில் கேமரூன் 27 ரன், மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக் அவுட். ரஜத் படிதார் 34 ரன்கள், என அவுட் ஆனார்கள். இறுதியில் மஹிபால் லோமரோர் – தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடினர். எனினும் 20 ஓவர் 8 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 20 ரன்னில் டாம் கோஹ்லர், 45 ரன்னில் யஷஸ்வி, அவுட். அடுத்து வந்த வீரர்கள் மள மள என ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்கள், ரியான் பராக் 36 ரன்கள், துருவ ஜுரேல் 8, ஹெட்மயர் 26, பவல் 16 என 19 ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி 174 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியை வீழ்த்தி, வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடும். அந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஆர் சி பி அணியை பொறுத்தவரை தொடர்ந்து எட்டு தோல்விக்கு பிறகு ஒரு வெற்றி பெற்றது. பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய ஒரு சதவீத வாய்ப்பு தான் இருந்தது. அதை பயன்படுத்தி சிறப்பாக ஆடி சிஎஸ்கேயை வீழ்த்தினார். தப்பி பிழைத்து உள்ளே நுழைந்ததை கோலி மற்றும் வீரர்கள் மறந்து விட்டனர். இந்த வெற்றிக்கு பிறகு அவர்கள் ஒரு வெற்றி மிதப்பில் இருந்தனர். வந்த வழியை மறந்து விட்டு செயல்பட்டதால் தோல்வியை சந்தித்துள்ளது. 17வது முறையாக ஐபிஎல் போட்டி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து விட்டனர்.
கோலி ப்ளே ஆஃப் சுற்றில் ஒரு முறை கூட சதம் அடித்தது கிடையாது. ரன்களை குவிக்க வேண்டும் என பந்துகளை விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார். ராஜஸ்தான் சஞ்சு சாம்சங் இதை புரிந்து கொண்டு வியூகம் அமைத்தார். சுழற் பந்துவீச்சாளர்களை இறக்கி விட்டார். அஸ்வின் பந்தை சரியாக கணித்து ஆடி தப்பித்த கோலியின் ஆட்டமானது சாகலிடம் எடுபடவில்லை.
சாகல் ஏற்கனவே ஆர் சி பி யில் விளையாடியவர். 2002இல் இவரை நீக்கிவிட்டனர். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. சிறப்பாக பந்து வீசி வந்த சாகல் 159 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்டவர் கோலி விக்கட்டையே தூக்கி பழிவாங்கி விட்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில், பிளே ஆப் சுற்றுக்குப் போனாலே கப் அடிப்பதற்கு ஆர்சிபி அணி என்ன சிஎஸ்கே அணியா?. தல டோனி என்று நினைப்பா? என சிஎஸ்கே ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆர்சிபி.யை வச்சு செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu