/* */

நாமக்கல் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு
X

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ளார். மாவட்டத்தில் மொத்தம் 5,53,558 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில், சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

நகராட்சிகள்:

குமாரபாளையம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 32,107, பெண் வாக்காளர்கள் 34,460, இதர வாக்காளர்கள் 14 பேர் என மொத்தம் 66,581 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் நகராட்சியில் ஆண்கள் 47,395 பேர், பெண்கள் 51,248 பேர், இதர வாக்காளர்கள் 37 பேர் என மொத்தம் 98,680 வாக்காளர்கள் உள்ளனர். பள்ளிபாளையம் நகராட்சியில் ஆண்கள் 18,447 பேர், பெண்கள் 19,107 பேர் என மொத்தம் 37,554 வாக்காளர்கள் உள்ளனர். ராசிபுரம் நகராட்சியில் ஆண்கள் 19,670 பேர், பெண்கள் 21,246 பேர், இதர வாக்காளர்கள் ஒருவர் என மொத்தம் 40,917 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செங்கோடு நகராட்சியில் ஆண்கள் 38,933 பேர், பெண்கள் 41,065 பேர், இதர வாக்õளர்கள் 32 பேர் என மொத்தம் 80,030 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 5 நகராட்சிப் பகுதியில் 1,56,552 ஆண்கள், 1,67,126 பெண்கள், இதர வாக்காளர்கள் 84 பேர் என மொத்தம் 3,23,762 வாக்காளர்கள் உள்ளனர்.

டவுன் பஞ்சாயத்துக்கள்:

ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 20,023 வாக்காளர்களும், அத்தனூர் டவுன் பஞ்சாயத்தில் 8,252 வாக்காளர்களும், எருமப்பட்டியில் 9,738 வாக்காளர்களும், காளப்பநாய்க்கன்பட்டியில் 9,071 வாக்காளர்களும், மல்லசமுத்திரத்தில் 16,190 வாக்காளர்களும், மோகனூரில் 12,059 வாக்காளர்களும், நாமகிரிப்பேட்டையில் 19,011 வாக்காளர்களும், படவீடு டவுன் பஞ்சாயத்தில் 9,342 வாக்காளர்களும், வாக்காளர்களும், பாண்டமங்கத்தில் 6,362 வாக்காளர்களும், பரமத்தியில் 8,897 வாக்காளர்களும், ஆர்.பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் 7,578 வாக்காளர்களும், பிள்ளாநல்லூரில் 9,424 வாக்காளர்களும், பொத்தனூரில் 15,974 வாக்காளர்களும், ஆர்.புதுப்பட்டியில் 6,076 வாக்காளர்களும், சீராப்பள்ளியில் 11,157 வாக்காளர்களும், சேந்தமங்கலத்தில் 18,202 வாக்காளர்களும், ப.வேலூரில் 21,715 வாக்காளர்களும், வெங்கரையில் 18,233 வாக்காளர்களும், வெண்ணந்தூரில் 12,492 வாக்காளர்களும், என 19 டவுன் பஞ்சாயத்துக்களில் 1,11,143 ஆண்கள், 1,18,622 பெண்கள்.31 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,29,796 வாக்காளர்கள் உள்ளனர்.

அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள, வாக்காளர் பட்டியலில், தங்களின் பெயர் இருப்பதை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம். இந்த பட்டியிலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் இருந்தால், சம்மந்தப்பட்ட சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரிகள் மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...