/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 78 மையங்களில் கர்ப்பிணிகள், 2வது தவணை தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் மற்றும் 2வது தவணை போட வேண்டியவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 78 மையங்களில் கர்ப்பிணிகள், 2வது தவணை தடுப்பூசி
X

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 2வது தவணை போட வேண்டியவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 14ம் தேதி கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட 63 ஆரம்ப சுகாதார மையங்களில் போடப்படுகிறது.

நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம், சோளக்காடு, பவர்க்காடு, தேனூர்ப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம், எருமப்பட்டி, செவந்திப்பட்டி, அலங்காநத்தம், பவித்திரம், பாலப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வலையப்பட்டி, எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர், நாமக்கல், முதலைப்பட்டி, நல்லூர், பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, ஜேடர்பாளையம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், எறையமங்கலம், சித்தளந்தூர், திருச்செங்கோடு, டி.பி.பாளையம், சீத்தாரம்பாளையம், எலந்தக்குட்டை, கே.கே.வலசு, கொக்கராயன்பேட்டை, படைவீடு, காடச்சநல்லூர், பல்லக்காபாளையம், குமாரபாளையம், மரக்கால்காடு, பள்ளிபாளையம், ஓ.சவுதாபுரம், அத்தனூர், கல்லங்குளம், பிள்ளாநல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம், ராசிபுரம்,வினைதீர்த்தபுரம், ஏளூர், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி, மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி, மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை ராமாபுரம் ஆகிய 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று 3,000 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி:

நாமக்கல் மாவட்டத்தில் கோவாக்சின், 2வது டோஸ் தவணை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டும், இன்று கீழ்க்கண்ட 15 அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் 1,920 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

திருச்செங்கோடு, சீத்தாரம்பாளையம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், குமாரபாளையம் (ஜிஎச்), பள்ளிபாளையம் (ஜிஎச்), நாமக்கல்,முதலைப்பட்டி, நாமகிரிப்பேட்டை, நல்லூர், மோகனூர், மாணிக்கம்பாளயைம், மல்லசமுத்திரம், ஓ.சவுதாபுரம் மற்றும் டிவிஎஸ் மையம் ஆகிய இடங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.

Updated On: 14 July 2021 3:07 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...