/* */

நாமக்கல் மாவட்டத்தில் இனி தடையில்லா மின்சாரம்: மின்சார வாரியம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில், தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இனி  தடையில்லா மின்சாரம்:  மின்சார வாரியம் அறிவிப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில், தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் நாமக்கல், பரமத்தி÷ வலூர், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பகுதகளிலும் கடந்த ஜூன் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 23 துணை மின் நிலையங்களிலும், அதை சார்ந்த மின் பாதைகளிலும், பராமரிப்பு பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. 7,465 இடங்களில் மின் பாதைகளில் படும் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 15 உடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 84 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 29 மின்கம்பங்களுக்கு இடை சொருகல்கள் செய்யப்பட்டுள்ளன. 104 இடங்களில் பழுதடைந்த இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. 496 இடங்களில் மின் தொடர்களில் வழுவிழந்த ஜம்பர்கள் மாற்றப்பட்டுள்ளன. 296 இடங்களில் ஏபி சுவிட்ச் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1.34 கி.மீ தொலைவிற்கு முதிர்ந்த மின்கடத்திகள் மாற்றப்பட்டுள்ளன. 40 இடங்களில் தொய்வான மின்பாதைகள் சரி செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மின்சார விநியோகம் சம்மந்தமான புகார்களை 1912 என்ற கட்டணமில்லா போன் நம்பரிலும், 94987 94987என்ற செல்போன் நம்பரிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எ ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்