/* */

புதிய வேலை நேர சட்ட மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்

வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்த்துவிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வது ஒரு உதாரணத்திற்கு சொல்வது.

HIGHLIGHTS

புதிய வேலை நேர சட்ட மசோதாவுக்கு  ஆதரவளிக்க வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்
X

கொங்கு ஈஸ்வரன் (பைல் படம்).

தமிழகத்தில் 12 மணி நேரம் வேலை நேரமாக அறிவிக்கப்பட்டால் கிடைக்கும் நன்மையை புரிந்துகொண்டு, சட்ட மசோதாவிற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிக் வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தால், தொழிலாளரகள் தினசரி 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. சட்டப்படி ஒரு வாரத்தில் மிகை நேரத்தையும் சேர்த்து 60 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க முடியாது என்பது சட்டம். ஒரு தொழிற்சாலையில் நாளை உற்பத்தியை முடிக்க வேண்டும் என்ற நிலையில், இன்று ஒரு 4 மணி நேரம் வேலை பார்த்தாக வேண்டும் என்ற நிலை வரும் போது தேவைக்கேற்ப எவ்வளவு பேர் வேலை பார்க்க வேண்டுமோ அவர்கள் 12 மணி நேரம் வேலை பார்ப்பார்கள். அதற்கு இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்த்துவிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வது ஒரு உதாரணத்திற்கு சொல்வது.

ஒரு தொழிற்சாலையில் 1000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால் இன்றைக்கு ஒரு 100 பேர் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். நாளைக்கு வேறு 100 பேர் அதிக நேரம் வேலை பார்க்க தேவை ஏற்படலாம். பக்கத்து ஊர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்த்து ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு சென்று திங்கள்கிழமை மறுபடியும் வேலைக்கு வர வேண்டும் என்ற நிலையில்லாமல் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதி மூன்று நாட்கள் சம்பளத்தோடு விடுமுறை பெற்று சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த ஆட்சியில் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர நொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன என்பதை அறிவோம். மேலும் தொழிற்சாலைகள் மூடப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேலை நேரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டால் வேலையிழப்புகள் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும் அதே சமயத்தில் இயங்குகிற தொழிற்சாலைகளும் பாதுகாக்கப்படவேண்டும். இந்த திருத்தத்தின் மூலம் பல நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படும்.

ஏற்கனவே, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பல மாநிலங்களில், புதிய திருத்தப்பட்ட தொழிலாளர் வேலை நேர சட்டம் அமலில் உள்ளது. எல்லா மாநிலங்களுமே இதை அமல்படுத்த உள்ளனர். நாம் செய்யவில்லையென்றால் பாதிக்கப்படுவோம். இங்கிருக்கிற தொழிற்சாலைகள் அங்கு சென்ற பிறகு, வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிடும். பிற்காலத்தில் புலம்பிப் பயன் இல்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம் கூட சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. 1 வருடம் செயல்படுத்தி சாதக பாதகங்களை பார்க்கலாம். புதிய சட்ட திருத்தத்தால் தொழிலாளர்கள் சுரண்டப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனை நிறைவேற்றாவிட்டால் தொழில் வளர்ச்சியில் நாம் பின் தங்கி விடுவோம். இங்குள்ள தொழிற்சாலைகள் வேறு இடத்திற்கு புலம் பெயரும் ஆபத்தும் உள்ளது.

சட்டங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாடயமாகும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் நலன் சட்ட திருத்தம் தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகும். இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களை குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து கொடுக்க இயலும். இந்த சட்ட திருத்ததின் மூலம் நடைமுறையில் உள்ளவை வரைமுறைப்படுத்தப்படும். அண்டை மாநிலங்களோடும், வெளிநாடுகளோடும் போட்டி போட இயலும். தமிழகத்தின் உற்பத்தி திறன் அதிகமாகும், பொருளாதாரம் மேம்படும். தொழிற்சாலைகள் விரிவாக்கம் நடைபெறும்.

இந்த சட்ட திருத்தம் அடித்தட்டு மக்களின் பாதுகாப்பிற்கும், பொருளாதார முன்னேற்றததிற்கும் வழிவகுக்கும் என்பதால் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்து கொண்டு தமிழக அரசின், புதிய வேலை நேர சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 April 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்