/* */

நாமக்கல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு
X

நாமக்கல் கோட்டை நகராட்சிப் பள்ளியில் நேற்று வருகை தந்த மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், முன்னாள் எம்.பி. சுந்தரம் ஆகியோர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 18 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தடுப்பூசியின் பயனாக பரவல் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 9முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மாணவ மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளியில் அலங்கார தோரனங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு அரசு பள்ளிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது. காலை முதலே பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் மாணவ மாணவிகளை பூக்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். மேலும் மாணவ மாணவிகளுக்கு பென்சில், நோட்டுப்புத்தகம், பலூன், பொம்மைகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்கள்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ராமன், முன்னாள் எம்.பி சுந்தரம், நகர திமுக பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவகுமார், இலக்கிய அணி புரவலர் மணிமாறன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...