/* */

நாமக்கல்லில் பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த வேலைக்கார பெண் கைது

நாமக்கல்லில், வீட்டில் தனியாக இருந்து பெண்ணை கொலை செய்து நகையை திருடிச்சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த   வேலைக்கார பெண் கைது
X

நாமக்கல்லில், பெண்ணை கொலை செய்து நகையை திருடிச்சென்ற வேலைக்கார பெண் ஜெனிபரை, போலீசார் கைது செய்து, கோர்ட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

நாமக்கல் நடராஜபுரம் 4-வது வீதியில் தனியாக வசித்து வந்தவர் ஜானகி (50). இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து, நாமக்கல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே ஜானகியின் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்காரி ஜெனிபர் (25) என்பவர் மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

ஜெனிபர், தர்மபுரியில் பதுங்கி இருந்த நிலையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்ட ஜானகி, வேலைக்காரி ஜெனிபரை வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும், இதனால் ஆத்திரம் அடைந்த ஜெனிபர், ஜானகியின் முகத்தை தலையணையால் அமுக்கியும், கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையொட்டி போலீசார் ஜெனிபரை கைது செய்தனர்.

போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் ஜெனிபர் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியை சேர்ந்த எனக்கு பெற்றோர் இல்லை. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்த முரளி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். அவர்களை விட்டு விட்டு, 6 மாதங்களுக்கு முன்பு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன்.

அப்போது ஜானகி உடல்நலக்குறைவால் அங்கு சிகிச்சை பெற வந்தார். அங்கு, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் ஜானகி வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். என்னை வீட்டிலேயே அடைத்து வைத்து கொண்டு, எனக்கு தர வேண்டிய சம்பளம் ரூ.9,500-ஐ தராமல் கொடுமைப்படுத்தினார்.

இதனால், கடந்த 22-ந் தேதி மாத்திரை போட்டு விட்டு தூங்கிய ஜானகியின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றேன். இருப்பினும் அவர் உயிர் போகாத காரணத்தால், கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தேன். அத்துடன், ஜானகி அணிந்து இருந்த அரை பவுன் தங்கத்தோடு, மற்றும் வீட்டில் இருந்த ரூ.4,500, ஹோம் தியேட்டர் ஆகியவற்றை திருடிக்கொண்டு, ஆட்டோவில் தப்பியதாக, போலீசாரிடம் தெரிவித்தார்.

ஜெனிபர் கொடுத்து தகவலின் பேரில், அவரிடம் இருந்த தங்கத்தோடு, ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Jun 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!