/* */

பணியின்போது இறந்த அரசு ஜீப் டிரைவர் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை

நாமக்கல்லில், பணியின்போது இறந்த அரசு ஜீப் டிரைவரின் மகனுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பணியின்போது இறந்த அரசு ஜீப் டிரைவர் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை
X

அரசு ஜீப் டிரைவராக பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த டிரைவர் ரவி என்பவரின் மகன் சக்திகண்ணனுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 260 மனுக்களை அளித்தனர். பின்னர், தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்களை, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், முதலமைச்சரின் இலங்கை தமிழர் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து, 2 பயனாளிகளுக்கு மருத்துவ உதவித் தொகை தலா ரூ.15,000-க்கான காசோலைகளையும், சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவையும், அரசு ஜீப் டிரைவாக பணிபுரிந்து, பணிக் காலத்தின்போது இறந்த ரவியின் மகன் சக்தி கண்ணனுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப்கலெக்டர் ரமேஷ், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், இலங்கை தமிழர் மறுவாழ்வு தனி தாசில்தார் சுந்தரவள்ளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!