/* */

திமுகவிடமிருந்து காங்கிரசை தனிமைப்படுத்தவேண்டும்: விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை தனிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பாண்டியன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திமுகவிடமிருந்து காங்கிரசை தனிமைப்படுத்தவேண்டும்: விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்
X

கர்நாடகாவில் மேகாதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் முதல் மோகதாது வரை செல்லும் விவசாயிகள் பேரணி நாமக்கல் வந்தடைந்தது.

மேகதாது பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக செயல்படும், காங்கிரஸ் கட்சியை, திமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பாண்டியன், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் முதல், கர்நாடகா மாநிலம் மேகதாது வரை வரை விழிப்புணர்வுப் பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக, நூற்றுக்கணக்கான விவசாயிகள், காவிரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பேரணியாக செல்கின்றனர். இந்த குழுவினர் நாமக்கல் வந்தனர். நாமக்கல் அண்ணைõ சிலையில் இருந்து பரமத்திரோடு சந்ததிப்பு வரை பேரணியாக அவர்கள் வந்தனர்.

பின்னர். குழுவின் பொதுச்செலயாளர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்துக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்கின்றனர். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி இதற்கு பதிலளிக்காமல் மவுனமாக உள்ளார். தமிழகத்துக்கு எதிராக உள்ள காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும். கூட்டணியில் இருந்து உடனடியாக அக்கட்சியை திமுக வெளியேற்ற வேண்டும்.

இந்தப் பேரணி ஓசூர் வழியாக மேகதாதுவை சென்றடைந்தவுடன், அங்கு கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்க உள்ளோம். ஆறுகளில் மணல் கொள்ளை, வரம்புமீறி மணல் அள்ளப்படுவது, வெளி மாநிலங்களுக்கு கடத்தல் உள்ளிட்டவற்றை அடியோடு எதிர்க்கிறோம். அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து, அரசே பொதுமக்களுக்கு நேரடியாக மணலை விநியோகம் செய்ய வேண்டும். மணல் கொள்ளையில் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறினார். விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  2. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  3. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  4. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  5. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  9. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  10. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!