கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
குரு பெயர்ச்சி (கோப்பு படம்)
கோள்களின் இயக்கங்களால் பூமியில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. உதாரணத்துக்கு பௌர்ணமி நாட்களில் அலைகளின் எழுச்சி அதிகமாக இருக்கும். கோள்கள் இயக்கம்பெறும்போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாறுகிறது. அவ்வாறான மாற்றங்களுக்கு நமது ஜோதிட சாஸ்திரத்தில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அது ஆன்மீகமும் அறிவியலும் கலந்த ஒரு பார்வை. அந்த நம்பிக்கை நமக்கான ஒரு பகுதியே தவிர அதுவே முழுமையான தீர்வு அல்ல என்பதையும் நாம் உணர்தல் அவசியம் ஆகும்.
கிரக பெயர்ச்சி ஏற்பட்டுவிட்டால் நமது மக்களும் ஒரு ஜோதிடரை விடாமல் தன் ராசிக்கு கிரக பெயர்ச்சிபலன் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு சேனல் அலலது பத்திரிக்கையை விடாமல் நோண்டுகிறார்கள்..அவர்களுக்காகத்தான் இந்த பதிவு..
கிரகபெயர்ச்ச்சி வந்தால் நேரில் சென்று ஜாதகத்தை கொடுத்து பலனைக் கேளுங்கள். அதைவிடுத்து டிவியில் பத்திரிக்கையில் யூடியூபில் தன் ராசிக்கு என்ன பலன் சொல்கிறார்கள் என்று நீங்களாகவே சென்று வைத்தியம் செய்து கொள்ளாதீர்கள். இப்படியான உங்கள் ஆர்வமே மீடியாக்கள் ஜோதிடர்களை வைத்து வருமானம் பார்க்கின்றன.
ஒருவருக்கு அவருடைய ராசியை வைத்து பொதுவான பலனை சொல்லும் மீடியா விளம்பர ஜோதிடபலன் பெரும் தவறு மட்டமல்ல. பெரும் குற்றமும் கூட. இது வடிகட்டிய அயோக்கியத்தனம் என்று தெரிந்தும் தன் விளம்பரத்திற்காகவும், தன்னை அழைக்கும் மீடியாக்களின் டிஆர்பி, மற்றும் வருவாய்க்காகவும் இப்படி கிரக பெயர்ச்சி வந்தவுடனே அந்த ராசிக்கு அவ்வளவு பலன் இந்த ராசிக்கு இந்த பலனென்று பிதற்ற கிளம்பி விடுகிறார்கள்.
இப்படி ஒரு ராசியை வைத்து அந்த ராசி உள்ள உலக மனிதர்களுக்கெல்லாம் ஆருடம் சொல்வது அபத்தமே..!ஏனெனில்..ஒருவருக்கான ஜாதக பலன் ஒரே ராசி அடிப்படையிலான பொதுப்பலனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். 90 சதவீதம் வேறு வேறாகத்தான் இருக்கும். அதனால் கிரக பெயர்ச்சி வந்ததும் தன் ராசிக்கு என்ன பலன் என்ற கேள்வியை தூக்கி கொண்டு நிற்காதீர்கள்..
ஏன் சொல்கிறேன் என்றால் குரு பெயர்ச்சி தற்போது வந்தது போதும்.. மேஷ ராசிக்கெல்லாம் பொதுப்பலன் ஆஹா ஓஹோ என்று கிளப்பி விடுகிறார்கள். மேஷராசி உள்ள எல்லோருக்கும் இது பொருந்துமா?யோசிக்க வேண்டாமா?சரி கேட்பவர்களுக்குத்தான் ஜோதிட ஞானமில்லை ஜோதிடராவது பொதுபலன் சொல்வது சரியா என யோசிக்க வேண்டாமா? ராசியை மட்டும் வைத்து பலன் சொல்லும் எந்த ஜோதிடனும் சரியான ஜோதிடனாக இருக்க மாட்டான் ஜோதிடத்தை நம்புவனாக, விரும்புலவனாக இருக்க மாட்டான்.
ஏனெனில் ஒருவரின் ஜாதக பலன் என்பது அவருடைய ராசியை அடிப்படையாக மட்டுமே அல்லாமல், அவரது லக்கினம், நட்சத்திரம் தசாபுத்தி, ராசிகட்டத்தில் பிறந்த போது இருக்கும் கிரகங்கள், பார்க்குமிடங்கள், கிரக சேர்க்கைகள், தற்போது க்ரகபெயர்ச்சி செய்யும் கிரகத்தின் பார்வைகள், கிரக பெயர்ச்சி செய்யும் கிரகத்தின் மீதான கோச்சார கிரக பார்வைகள் ஆகியவையே ஜாதகரின் பலனை தீர்மானிக்கிறது.
இப்படி பல விசயங்கள் ஒரு ஜாதகரின் ஜாதக பலன் சார்ந்து இருக்கும் போது ஒருவருடைய பொதுவான ராசியை வைத்து பொதுப்பலனென்று சொல்லி வருவதும் தவறு. அதைக் கேட்பதும் தவறு. அப்படி பலன் சொன்னால் அது விளம்பரம், ஏமாற்றுத்தனம் மட்டுமே! உண்மையல்ல. இதனை சொன்னவரும் ஒரு ஜோதிடர் தான் என்பதை மறந்து விடாதீர்கள். ஜோதிடத்தை நம்புங்கள். அது மிக நல்ல ஆன்மீகம் கலந்த ஒரு அற்புதமான அறிவியல் கலை. உங்கள் ஜாதகத்தை நேரடியாக ஜோதிடரிடம் எடுத்துச் சென்று பலன்களை கேளுங்கள். பொதுப்பலன்களை கட்டாயம் நம்பாதீர்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu