/* */

நாமக்கல்லில் பல்வேறு அமைப்பினரின் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகளில் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பல்வேறு அமைப்பினரின் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
X

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்து ஆய்வாளர் உமாமகேஸ்வரியைப் பாராட்டி, கல்லூரி செயலாளர் தென்பாண்டியன் நல்லுசாமி கேடயம் வழங்கினார்.

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் டிரினிடி மகளிர் மன்றம், நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாமக்கல் ரோட்டரி கிளப், நாமக்கல் இன்னர்வீல் கிளப் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் மகளிர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்புடன் கூடிய மகளிர் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி சேர்மன் செங்கோடன் முன்னிலை வகித்தார். செயலாளர் தென்பாண்டியன் நல்லுசாமி தமைமை வகித்து பேசினார். நாமக்கல் தெற்கு ஆர்டிஓ முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டூ வீலர்களில் செல்பவர்கள் அவசியம் ஹெல்மட் அணியவேண்டும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்கு வேண்டும், அனைத்து வாகனங்களிலும், பதிவு சான்று, இன்சூரன்ஸ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை விளக்க கூறி அவற்றை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மகளிர் தினத்தை முன்னிட்டு, மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி செயல் இயக்குனர் அருணா செல்வராஜ், தங்கம் மருத்துவமனை டாக்டர் மல்லிகா, டிரினிடி போக்குவரத்து இயக்குநர் சித்தார்த்தன், முதல்வர் லட்சுமிநாராயணன், உயர்கல்வி இயக்குனர் அரசுபரமேஸ்வரன், ரோட்டரி சங்கத் தலைவர் விஸ்வநாதன், இன்னர்வீல் கிளப் தலைவர் நிர்மலா, டிரினிடி மகளிர் மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் முதுநிலை தமிழ்த்துறைத் தலைவர் அனுராதா தலைமையில் குடும்ப வாழ்வில் சவால்களை அதிகம் எதிர்கொள்வது ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரிப் பேராசிரியைகள் மற்றும் மாணவியரின் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் திரளான மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

நாமக்கல் தலைமை தபால் அலுவலகம்:

நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் அனைத்து மகளிரும், தமிழர்களின் பாரம்பரிய உடையான புடவை அணிந்து அஞ்சலகத்திற்கு வந்திருந்தனர். அஞ்சலகத்தில் கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தலைமை அஞ்சலக அதிகாரி சத்தியமூர்த்தி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். துணை அஞ்சலக அதிகாரி தீபா பெண்கள் முன்னேற்றம் அதற்கு தடையாக இருக்கும் காரணிகள், தடைகளை எவ்வாறு உடைப்பது என்பது குறித்து பேசினார்.

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி

நாமக்கல்லில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழாவி அதன் தலைவர் காந்தியவாதி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்திய கணசங்கம் கட்சி நிறுவனர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கட்சியின் ஆலோசகர் பி.தட்சிணாமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர் எம். ராஜா, மாநில மகளிர் அணி தலைவி கீதாஞ்சலி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 9 March 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...