/* */

திருச்செங்கோட்டில் 1,381 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா: அமைச்சர் வழங்கல்

திருச்செங்கோட்டில் 1,381 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில்  1,381 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா: அமைச்சர் வழங்கல்
X

திருச்செங்கோட்டில் ரூ.13.18 கோடி மதிப்பில், பட்டாக்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் ஆட்சியர் உமா, எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர்.

திருச்செங்கோட்டில், 1,381 பயனாளிகளுக்கு, ரூ. 13.18 கோடி மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

திருச்செங்கோட்டில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பட்டாவழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.திருச்செங்கோடு எம்எல்ஏ எம்எல்ஏ.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 1,381பயனாளிகளுக்கு, ரூ.13.18கோடிமதிப்பீட்டில், இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி பேசியதாவது:

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் ஓராண்டு முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு பயன்படும் வகையில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், தொழில் சார்ந்த திட்டங்கள், கல்வி, மருத்துவம், பேருந்துவசதி, சாலை, உணவு, வீடு, என அனைத்தையும் சிந்தித்து செயல்படுத்தி மக்கள் பணியாற்றிய கருணாநிதியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக முதல்வர் இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து தரப்புமக்களும் உதவிபெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

மேலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டம், பெண்கள் தொழிற் கல்வி படிக்க புதுமை பெண் திட்டம், அரசு பஸ்களில் விடியல் பயணத் திட்டம், ஆசிரியர்களுக்கான பல்வேறு திட்டங்கள், சுகாதாரம் சார்ந்த திட்டங்கள், திருச்செங்கோட்டில் அரசு அரசு மருத்துவமனை அமைக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார் மேலும், மருத்துவ வசதி அனைவரும் கிடைக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம், இல்லம்தேடி கல்வி திட்டம், வீடு இல்லாத ஏழைமக்களுக்கென வீடு கட்டும் திட்டம் என அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Dec 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?