/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 36,804 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 14-ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 36,804 பேருக்கு தடுப்பூசி செலுத்துப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 36,804 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற 13 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளன. 14-ஆம் கட்டமாக அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 472 முகாம்கள், 41 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 513 முகாம்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இம்முகாம் பணிகளில் 210 டாக்டர்கள், 845 நர்சுகள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள், 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணி முதல் மாலை 7மணிவரை நடைபெற்றது.

முகாமில், மொத்தம் 36,804 பேருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 12 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?