/* */

மேட்டூர் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மேட்டூர் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
X

மேட்டூர் அணை.

விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் செல்ல ராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தற்போது மேட்டூர் நீர் அணையில், 108 அடி (75டிஎம்சி) நீர் இருப்பு உள்ளது. அணையில்இருந்து, குடிநீருக்காக 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் குடிநீருக்காகவும், காவிரி கரையோரம் ஆற்று நீர் பாசனம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்ததால், காவிரி கரையின் இருபுறமும் உள்ள ஊற்று நீர் கிணறுகளில்ங நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதனால் கிணற்று நீர் பாசனம் செய்யும் விவசாய நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக குறைந்தது 5,000 கனஅடி நீர் திறப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் குடிநீருக்கும், பாசனத்திற்கும் காவிரியை நம்பியே உள்ளதால், இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சில இடங்களில் விவசாயிகள், காவிரியிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யும்போது, சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, காவிரி பாயும் பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 13 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...