/* */

நாமக்கல்லில் முட்டை விலை 15 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.25

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 15 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.25
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.40 ஆக இருந்த முட்டை விலை, 15 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 6 ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.70 ஆக இருந்தது. 7ம் தேதி 10 பைசா குறைந்து 4.60 ஆனது. பின்னர் 9ம் தேதி 20 பைசா குறைந்து ரூ.4.40 ஆனது. இன்று மீண்டும் 15 பைசா குறைந்து ரூ.4.25 ஆனது. கடந்த ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு 45 பைசா விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 450, பர்வாலா 410, பெங்களூர் 440, டெல்லி 430, ஹைதராபாத் 385, மும்பை 450, மைசூர் 440, விஜயவாடா 415, ஹொஸ்பேட் 400, கொல்கத்தா 468.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 102 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 12 Feb 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!