/* */

விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் திருத்தம்: டிச.29ல் சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்கள் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள, 29ம் தேதி மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் திருத்தம்: டிச.29ல் சிறப்பு முகாம்
X

இதுகுறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பிற்குப் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், பெயர் மாற்றம், சர்வே எண் மற்றும் உட்பிரிவு மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்து கொடுக்க சிறப்பு முகாம், நாமக்கல் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பம் பெயர் மாற்றத்திற்கு இறப்பு சான்று, வாரிசு சான்றிதழ், பங்குதாரர்களின் ஆட்சேபனை இல்லா கடிதம், வருவாய் அலுவலர் சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு வருவாய் அலுவலர் சான்று மற்றும் வரைபடமும், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய, புதிய வருவாய் அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவை கொண்டு வர வேண்டும். மாற்றம் தேவைப்படுபவர்கள் இம்முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!