/* */

நாமக்கல் அரசு பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு பள்ளியில் போதைப்  பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
X

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மனநல மருத்துவர் முகிலரசி பேசினார்.

நாமக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட, மருத்துவத்துறை, மனநல திட்டம் சார்பில், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஜெகதீசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி முன்னிலை வகித்தார். மாவட்ட மனநல டாக்டர் முகிலரசி நிகழ்ச்சியில் பேசியதாவது:

பள்ளிக் குழந்தைகள் இண்டநெட் மூலம் நடைபெறும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிலேயே காலத்தை செலவழித்து, மனம் நலம் இழக்கின்றனர். அது உடலுக்கும் மனதுக்கும் தீங்கிழைக்கக் கூடியது எதிர்காலத்தை பாதித்து நிர்மூலமாக்க கூடியது. ஆல்கஹால் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் மிகப்பெரிய கேடு.

அதுபோலவே பெண் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் களையப்பட வேண்டும், அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். நல்லதொரு நல்லதொரு சமூகம் மலர மாணவர்கள் உறுதுணை புரிய வேண்டும். உதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள், 1091 சைல்டு லைன் நம்பர். மற்றும் 181 , 100 போன்ற உதவி எண்களில் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என கூறினார். ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!