திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு

திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு
X

Coimbatore News- சவுக்கு சங்கர் தரப்பு வக்கீல் கோபால கிருஷ்ணன்.

Coimbatore News- திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர் என்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் சார்பில் 3 வழக்கறிஞர் 2 மருத்துவர்களுடன் சிறையில் நேரடியாக சவுக்கு சங்கரை சந்தித்துள்ளனர். நேற்று என்ன நிலைமையில் இருந்தாரோ, அதே நிலையில் தான் இன்றும் காயங்களுடன் உள்ளார்.வலி நிவாரணி மாத்திரைகளை அவருக்கு கொடுத்து வருகின்றனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளான கை உடைக்கப்பட்டது, காயங்கள் தொடர்பாக சட்டப்பணிகள் குழுவினர் கேட்டறிந்துள்ளனர். கோவை மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சவுக்கு சங்கருக்கு கூடுதல் மருத்துவம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டும், தேவையான மருத்துவம் மேற்கொள்ளப்படவில்லை,

மருத்துவ உதவி செய்யவில்லை என்று நேற்று மனு தாக்கல் செய்து இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சார்பில் நேரடியாக ஆய்வு செய்துள்ள நிலையில், சென்னையில் வழங்கப்பட்டுள்ள சிறைத்துறை அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. சனிக்கிழமை நீதிபதி முன்னிலையில் கைது குறிப்பாணையில் கையெழுத்திட்ட சவுக்கு சங்கர், இன்று காலை தேனி காவல் துறையினர் கைது குறிப்பாணை கொடுக்கப்பட்ட நகலில் கைரேகை இட்டுள்ளார். ஏன் அவர் கைரேகை இட்டுள்ளார்? கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் காவல் மனு மீதான இன்று விசாரணை வந்த நிலையில், சவுக்கு சங்கர் தன் மீதான தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் தெரிவிக்க வாய்ப்புள்ளதால் தான் இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிமிடம் வரை எக்ஸ்ரே எடுக்கவில்லை. சிறையில் நேரடியாக ஆய்வு செய்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை பெற்று, சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நாளை கேட்க உள்ளோம். நாங்கள் எக்ஸ்ரே எடுக்க சொல்லி தான் கேட்கிறோம். சவுக்கு சங்கருக்காக மட்டும் இந்த முயற்சி இல்லை, நாள்தோறும் காவலர்களால் மனித உரிமை மீறல்கள், லாக் அப் தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளது, அதை சரி செய்யவே இந்த முயற்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் செல்வோம், ஆனால் முதலில் மருத்துவ உதவி அவசியம், 2 நாட்கள் போராடியோம் ஒரு எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை. அரசுக்கு எதிராக பேசியதன் காரணமாக காவல் துறை மூலமாக பழி வாங்கப்படுவதாக சவுக்கு சங்கர் எண்ணுகிறார்.

மருத்துவ உதவி செய்து அவர் உயிருடன் இருந்தால் தான் காவல்துறை வழக்கு போட முடியும் என்று சொல்லி கொள்கிறேன். காவல் துறை அராஜகம், சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதை தான் இந்த வழக்கில் முக்கியமாக பார்க்க வேண்டும். சிறைத்துறை அறிக்கை தவறானது என்று இன்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை நாளை நிரூபிக்கும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!