/* */

கோழித்தீவன விலை உயர்வால் முட்டை விலை ரூ.6 க்கு மேல் விற்பனை செய்ய கோரிக்கை

2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ தீவனம் ரூ.14முதல் 16 வரை இருந்தது. தற்போது ஒரு கிலோ ரூ. 27ஆக உள்ளது.

HIGHLIGHTS

கோழித்தீவன விலை உயர்வால் முட்டை விலை ரூ.6 க்கு மேல் விற்பனை செய்ய கோரிக்கை
X

தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் பேசினார்.

கோழித்தீவன விலை உயர்வால், கோழி முட்டை விலை ரூ.6க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் பேசினார்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில், தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் மற்றும் கோழி வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க கவுர தலைவர் சின்ராஜ் எம்.பி, நாமக்கல் எ ன்இசிசி தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் கோழி முட்டை விலை அடிக்கடி விலை சரிவடைவதால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முட்டை விலை மிகவும் சரிவடைந்ததால் பல பண்ணையாளர்கள் தங்களின் பண்ணைகளை தொடர்ந்து நடத்த முடியாமல் கோழிகளை விற்பனை செய்துவிட்டு பண்ணைகளை மூடி விட்டனர். இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அனுராதா தேசாய் பண்ணையாளர்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவர் 2 கோடி முட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரூ.60 லட்சத்திற்கும் மேல் மான்யம் அளித்ததால், முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்நாட்டில் முட்டை விலை உயரத்தொடங்கியது. தற்போது கோழித்தீவனத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு, தவிடு போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ தீவனம் ரூ.14முதல் 16 வரை இருந்தது. தற்போது ஒரு கிலோ ரூ. 27ஆக உள்ளது. இந்த நிலையில் ஒரு முட்டை ரூ.6க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே பண்ணையாளர்கள் ஓரளவு லாபம் பெற முடியும். அப்போதுதான் பேங்குகளில் வாங்கிய கடன் தவணையை செலுத்த முடியும்.

தற்போது ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. நெஸ்பேக்மூலம் அறிவிக்கப்படும் முட்டை விற்பனை விலையை தற்போது 90 சதவீதம் பண்ணையாளர்கள் பின்பற்றுகின்றனர். அனைத்து பண்ணையாளர்களும் முழுமையாக பின்பற்றினால் மட்டுமே முட்டைக்கு கட்டுபடியான விலை பெற முடியும். கோழிகளை 80 வாரத்திற்குள் விற்பனை செய்தால் மட்டுமே முட்டை உற்பத்தியை கட்டுப்படுத்தி நல்ல விலை பெற முடியும். ஒவ்வொரு கோழிப்பண்யயாளரும், குறிப்பிட்ட அளவு முட்டைகளை பாதுகாக்க தங்கள் பண்ணையில் வசதிகள் செய்ய வேண்டும். அப்போதுதான் முட்டை விலை சரிவடையும் நேரங்களில் இருப்பு வைத்து பின்னர் விற்பனை செய்ய முடியும்.

முட்டை வியாபாரிகள் மற்றும் கோழி வியபாரிகளை அனுசரித்தே நாம் தொழில் செய்ய வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்துக்கும்மேற்பட்ட பண்ணையாளர்கள் மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமா உள்ள கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற அனைத்து பண்ணையாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் நடைபெற்ற தென்னிந்திய கோழி வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தலில் சிங்கராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முடிவில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜ் நன்றி கூறினார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த என்இசிசி நிர்வாகிகள், கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் மற்றும் கோழி வியபாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...