/* */

நாமக்கல் மாவட்டத்தில் 80 நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 80 லைசென்ஸ் இல்லாத நாட்டுத்துப்பாக்கிளை பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 80 நாட்டுத் துப்பாக்கிகள்   போலீசாரிடம் ஒப்படைப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில்,  போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை, எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள், மலைப்பகுதிகளில் வேட்டையாடவும், தங்களின் பாதுகாப்பிற்காகவும், லைசென்ஸ் இல்லாமல், சட்டவிரோதமாக, நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இதை தடுக்கும் வகையில், பொதுமக்கள், தாமாக முன்வந்து துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதையொட்டி, கூடுதல் எஸ்.பி ரமேஷ்பாபு, டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.ஐ. கங்காதரன், தனிப்பிரிவு எஸ்.ஐ செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர், பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதற்கு பலனாக, இதுவரை 80 லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்த துப்பாக்கிகளை எஸ்.பி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 110 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 80 துப்பாக்கிகள் தானாக ஒப்படைக்கப்பட்டவை. அதற்காக, போலீசார் அடங்கிய குழுவினர் பொதுமக்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். மேலும், 30 துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது சம்மந்தமாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் அவகாசம் இருக்கிறது. ஊர் தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மூலம், பொதுமக்கள், தங்களிடம் உள்ள நாட்டுத்துப்பாக்கிகளை உனடியாக போலீசில் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். மேலும், கள்ளத்துப்பாக்கியை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கோ அல்லது 94981 01020 என்ற எண்ணிற்கோ, மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவித்தால், போலீசார் அதைக் கைப்பற்றி உரிய முறையில் பறிமுதல் செய்வார்கள் என்று கூறினார்.

Updated On: 6 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு