அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
மத்திய பிரதேச மாநிலத்தில் பிளாஸ்டிக் கூடையில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல்.
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது
நான்கு வயதான மாற்றுத்திறனாளி குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இரண்டு குழந்தைகள் எப்படியோ தப்பித்து வெளியே வந்துவிட மாற்றுத்திறனாளி குழந்தை மட்டும் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.
தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் குழந்தை முழுமையாக எரிந்து போய் உள்ளது. அக்கம் பக்கத்தினரே தண்ணீரை கொண்டு இருக்கும் தீயை அனைத்து குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பெற்றோர் உடலை கொண்டு செல்ல அமர்வு ஊர்தி கேட்ட நிலையில் இந்த உடலை இருசக்கர வாகனத்தில் கூட கொண்டு செல்லலாம் என காவல்துறையினரும் மருத்துவமனை நிர்வாகமும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து எரிந்த குழந்தையின் உடலை 14 கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்துள்ளனர் பெற்றோர். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu