/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 48 பேர்: மொத்தம் பாதிப்பு 53,264 பேர்

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 பேர். மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,264 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், குமாரபளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, பள்ளிபாளையம், கொமாரபாளயைம், ராசிபுரம், பெருந்துறை, கோவை, கரூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 53,264 ஆக உயர்ந்துள்ளது. இன்று 42 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 52,346 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 413 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 505 ஆக உள்ளது.

Updated On: 25 Nov 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...