/* */

நாமக்கல்லில் புறப்பட்ட பஸ்சில் கண்டக்டர காணோம்..! பாதி வழியில் பயணிகள் தவிப்பு

நாமக்கல்லில் அரசு பஸ் கண்டக்டர் திடீரென மாயமானதால், டிரைவர் பஸ்சை நிறுத்தி, பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் புறப்பட்ட பஸ்சில் கண்டக்டர காணோம்..! பாதி வழியில் பயணிகள் தவிப்பு
X

நாமக்கல்லில் கண்டக்டர் மாயமானதால், பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக்கழக பேருந்து.

சேலம் கோட்ட அரசு போக்குரவத்துக்கழத்தின், எடப்பாடி டிப்போவைச் சேர்ந்த பேருந்து, எடப்பாடி - கும்பகோணம் மார்க்கத்தில் சென்று வருகிறது. இந்த பேருந்தில் டிரைவராக அழகுமுத்துக்கோன் என்பவரும், கண்டக்டராக கோவிந்தன் என்பவரும் பணியில் இருந்தனர்.

சம்பவத்தன்று, கும்பகோணத்தில் இருந்து, எடப்பாடிக்குத் திரும்பிய அந்த பஸ், நாமக்கல் பஸ் நிலையத்திற்கு மதியம் 1 முணிக்கு வந்து சேர்ந்தது. நாமக்கல்லுக்கு பயணம் செய்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கினர். திருச்செங்கோடு, எடப்பாடி செல்லும் பயணிகள் ஏறினார்கள்.

பின்னர் டிரைவர் அழகுமுத்துக்கோன் 1.07 மணிக்கு பஸ் ஸ்டேண்டில் இருந்து பேருந்தை வெளியே ஓட்டி வந்தார். நாமக்கல் மணிக்கூண்டு சிக்னல் தாண்டி பரமத்தி ரோட்டில் பஸ் சென்றபோது, கண்டக்டர் பஸ்சில் இல்லை என்பது டிரைவரின் கவனத்திற்கு வந்தது. கண்டக்டரின் செல்போன் நம்பர் தெரியாததால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்ல. இதனால் பதற்றம் அடைந்து டிரைவர், பஸ்சை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, பஸ் ஸ்டேண்டிற்குச் சென்று அங்கு கண்டக்டரை தேடிப்பார்த்தார். அங்கு அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அதுவரை பேருந்தில் இருந்த பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். இதனால் மீண்டும் அங்கு வந்த டிரைவர், பேருந்தில் இருந்த பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

டிரைவர் அழகு முத்துக்கோன் அந்த பஸ்சை மீண்டும் பஸ் நிலையத்திற்கு திருப்பி ஓட்டி வந்தார். மதியம் 1.50 மணிக்கு கண்டக்டர் கோவிந்தன் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். பஸ் வெளியேசென்றுவிட்டதால், அதை பிடிப்பதற்காக அவர் வேறு ஒரு தனியார் பஸ்சில் ஏறிச் சென்றதாகவும், அரசு பஸ் வழியில் நின்றுவிட்டதால் அதைப் பிடிக்க முடியாமல் மீண்டும் பஸ் நிலயத்திற்கு திரும்பி வந்ததும் தெரியவந்தது.

தகவல் கிடைத்ததும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் டிரைவர், கண்டக்டர் 2 பேரையும் கண்டித்தனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். அனைவரும் எளிதாக செல்போன் மூலம் தொடர்புகொள்ளும் காலத்தில் அரசு பஸ் பணியாளர்களின் மெத்தனம் குறித்து பயணிகள் வேதனைப்பட்டனர்.

Updated On: 22 Oct 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...