/* */

நாமக்கல் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 12-14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்
X

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. மொத்தம் 50,700 பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 லட்சத்து 64 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 33 ஆயிரத்து 950 பேருக்கும், 2-ம் தவணை தடுப்புசி 9 லட்சத்து 16 ஆயிரத்து 745 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கோர்பேவேக்ஸ் என்ற புதிய வகை தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட, 50 ஆயிரத்து 700 சிறுவர், சிறுமிகளுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முதல் கட்டமாக தொடங்கப்பட்டது. விரைவில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...