சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா

சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் சர்வ சக்தி மாரியம்மன் திருவிழாவையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம் அருகே சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா நடந்தது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக, மேள தாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரத்தத்தில் அம்மன் சர்வ அலங்காரத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு திருவீதி உலா வந்தார்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தியவாறும், அம்மன் வேடமிட்டவாறும் கோவில் மற்றும் கிராமத்தை வலம் வந்தனர். பக்தர்கள் பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டு, படையல் போட்டு அம்மனை வணங்கினர். பெண்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வணங்கினர். சேத்தாண்டி வேடம், நடன களியாட்டம் அழைத்தல் வைபவங்கள் நடந்தன. மஞ்சள் நீர் திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.

நல்லாம்பாளையம், வீ.மேட்டூர், சின்னாயாக்காடு, கோட்டைமேடு, ஆலாங்காட்டுவலசு உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் திருவிழாவில் பங்கேற்றனர்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!