/* */

பாண்டமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

பாண்டமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பாண்டமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
X

பாண்டமங்கலத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில், கரூர் சைக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் பிலோராணி பேசினார். அருகில் டவுன் பஞ்சாயத்து துலைவர் சோமசேகர்.

பாண்டமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சோமசேகர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

முன்னிலை வகித்து பேசிய பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் முருகவேல், பெண்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

கரூர் சைக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் பிலோராணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேசினார்.

கந்தசாமி கண்டர் கலைக் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர் விஜயா, பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கல்பனா, மஞ்சுளா, மகளிர் அணி செயலாளர் சசிகலா மற்றும் திரளான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை வக்கீல் பவினேஷ்கர்ணன் தொகுத்து வழங்கினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வேர்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சாந்தி வரவேற்று பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுமதி நன்றி கூறினார்.

Updated On: 12 March 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?