/* */

நாமக்கல்லில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல்லில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில்  மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பெண்களுக்கான மார்பகப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார். 

நாமக்கல் தங்கம் கேன்சர் சென்டர் சார்பில் உலக மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், பிங்க் அக்டோபர் என்ற பெயரில், உலக மார்பகப்புற்று நோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்களிடையே மார்பகல் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்தால் மிக எளிதாக குணப்படுத்தலாம். பல பெண்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதால் பாதிக்கப்படுகின்றனர். எனவே அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெற உள்ள இலவச பரிசோதனை முகாமில் 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மார்பகப் பரிசோதனை செய்து பயனடையலாம் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

கோவை மகளிர் மைய இயக்குனர் டாக்டர் மிருது பாஷினி, மருத்துவ நிபுணர்கள் டாக்டர் சந்திரா, தீப்தி மிஷ்ரா, அருணாபிரபு, சுபா, இன்னர்வீல் சங்க மாவட்ட தலைவர் தாட்சாயினி, நாமக்கல் தங்கம் ஆஸ்பத்திரி மேலாண்மை இயக்குனர் டாக்டர் குழந்தைவேல், இணை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, தலைமை நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...